வால்பாறை கல்லார் எஸ்டேட் பகுதியில் இன்று 2 குட்டிகளுடன் 12 காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் பட்டப்பகலில் உலா வந்தன. இதனால் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. யானைகள் வனப்பகுதிக்குள் திரும்பிய பின்னரும், குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் நுழைவதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் யானைகள் நுழைவைத் தடுக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.