
SA vs Canada: 214 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் மூன்றாவது நாளான இன்று (பிப்ரவரி 9) மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 3வது போட்டி தென்னாப்பிரிக்கா - கனடா (குரூப் டி) அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கனடா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. இதில், எய்டன் மார்க்ரம் 32 பந்துகளில், 10 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து 59 ரன்கள் குவித்தார்.
































