ஹைதராபாத் அருகே உள்ள மீர்பேட்டை பகுதியில் டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். ஐடிஐ முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் பைக்கில் கல்லூரிக்கு செல்லும்போது, திடீரென குறுக்கே வந்த ஆட்டோவை தவிர்க்க திரும்பியபோது வலதுபுறம் வந்த டிப்பர் லாரி மோதி சக்கரத்தில் சிக்கினார். மாணவர் மீது மோதி 50 மீட்டர் அவரை இழுத்துச்சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.