வேலூர் தவெக மாநாட்டில் விஜய் பேசிய ஜல்லிக்கட்டு காளை கதையை விமர்சித்து பிக் பாஸ் பிரபலம் ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் தனக்கு விடுக்கும் மிரட்டலுக்கு பயந்து வீடியோவை நீக்கப்போவதில்லை என்றும், பழிவாங்க நினைப்பவர்கள் தனது அலுவலகத்திற்கு நேரில் வரலாம் என்றும் விஜய்யின் பாணியிலேயே அவர் சவால் விடுத்துள்ளார். ரசிகர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சப்போவதில்லை என அவர் வெளியிட்ட புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.