வணிக சிலிண்டர் ரூ.6,200க்கு விற்பனை.. ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த சில ஏஜென்சிகள், சிலிண்டர்களை நுகர்வோருக்குச் சரியாக விநியோகம் செய்யாமல் பதுக்கி வைப்பதாக கூறப்படுகிறது. அரசு தரப்பில் விநியோகம் 70% வரை அதிகரிக்கப்பட்டாலும், கள்ளச்சந்தையில் சிலிண்டர் விலை அதிகளவில் விற்பனையாவதாக குற்றம்சாட்டப்படுகிறது. வழக்கமான வணிக சிலிண்டரின் விலையான ரூ.2,200-க்குப் பதிலாக, தற்போது ரூ.6,200 வரை விற்கப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
