சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, பஞ்சாபில் வணிக சிலிண்டர் விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள இந்த முடிவினால், வணிகர்கள் அடுத்த சிலிண்டரை பெற 25 நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போர் சூழல் சீராகும் வரை இந்த தற்காலிக கட்டுப்பாடு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.