ஆணையத் தலைவர் நியமன வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

2123பார்த்தது
ஆணையத் தலைவர் நியமன வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு விரைந்து தலைவரை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அரசின் நிலைப்பாடு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி