தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தளியில் டி.ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டியில் மாரிமுத்து, திருப்பூர் வடக்கில் ரவி, பவானிசாகரில் பி.எல்.சுந்தரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் மகாலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.