கேரளாவில் ED கார்கள் மீது கற்களை வீசி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் தாக்குதல்

5249பார்த்தது
கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் திருவனந்தபுரம் இல்லத்தில், பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று (மே 27) சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிந்து அதிகாரிகள் வாகனங்களில் புறப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) கட்சி தொண்டர்கள் மற்றும் இடதுசாரி அமைப்பினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், அதிகாரிகளின் வாகனங்களை வழிமறித்த போராட்டக்காரர்கள், அவற்றின் மீது கற்கள், காலணிகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி