தவெக அமைச்சரவையில் இடம் பெறுகிறோமா? - சிபிஐ விளக்கம்

3544பார்த்தது
தவெக அமைச்சரவையில் இடம் பெறுகிறோமா? - சிபிஐ விளக்கம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி அமைச்சரவையில் இடம்பெறும் என்ற கொள்கை திட்டமும் இல்லை, அது போன்ற ஒரு முயற்சியும் இல்லை என அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் இன்று (மே 17) செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகள் ஒரே புள்ளியில் இருந்து ஆதரிக்கிறோம். அது நல்லாட்சி தர வேண்டும் என்பது தான். குதிரை பேரம் பற்றி அறியாதவர்கள் கம்யூனிஸ்டுகள். எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்கள் கூறியிருந்தாலும் அத்தகைய சிந்தனையில் எங்கள் கட்சி ஈடுபடாது என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி