அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இன்று (மார்ச் 27) செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், “எங்களுக்கு கிடைக்கக் கூடிய சைக்கிள் சின்னம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அப்பொழுதும் கிடைக்கவில்லை, இப்பொழுதும் கிடைக்கவில்லை. சைக்கிள் சின்னம் கிடைக்காத பட்சத்தில் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன்” என கூறியுள்ளார்.