மதுரை சேகம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், அரசுப் பேருந்தில் அரை கிலோ மல்லிகைப் பூ எடுத்துச் சென்றதற்கு ரூ.13 கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10 கிலோவுக்கு மேலான சரக்குகளுக்கே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விதியுள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போக்குவரத்துத் துறை மேலாளர் தெரிவித்துள்ளார்.