பிரபல திரைப்பட இயக்குநர் ராஜமௌலிக்கு எதிராக ராஷ்ட்ரிய வானர சேனா ஹைதராபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அனுமன் குறித்து இயக்குநர் ராஜமவுலி கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்து அமைப்பு போலீசில் புகார் தெரிவித்தனர். 'வாரணாசி' பட டீசர் வெளியீட்டில் அனுமன் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என ராஜமௌலி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.