நெல்லையில் கல்லூரி மாணவி குறித்து ஆபாச தகவல்களை பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வரின் சமூக வலைதள கணக்கு மூலம் மாணவி குறித்த ஆபாச தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரி முதல்வர், அவரது கணவரிடம் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.