அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சி கொடி, சின்னம் மற்றும் ஜெயலலிதா படங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் ஈரோடு கோபி டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோபி அதிமுக நகர செயலாளர் டிரிணியோ கணேஷ் தலைமையில் வழக்கறிஞர் அணியினர் அளித்த புகாரில், நீக்கப்பட்ட செங்கோட்டையனுக்கு கட்சி கொடி, சின்னம் பயன்படுத்த தார்மீக உரிமை இல்லை என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.