கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ என தவெக நிறத்தில் எழுதியதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈரோடு கோபி அருகே கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்த செங்கோட்டையன் எம்எல்ஏ என தவெக வண்ணத்தில் பெயர் எழுதப்பட்டுள்ளது. செங்கோட்டையன் எம்எல்ஏவாக இல்லாத நிலையில், தவெக வண்ணத்தில் அவரது பெயர் எழுதப்பட்டிருப்பது சரியல்ல என அதிமுகவினர் குற்றம்சாட்டினர். அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்துவிட்டு தவெக வண்ணத்தில் எப்படி எழுதலாம் என எதிர்க்கின்றனர்.