புதுக்கோட்டையின் ரெங்கம்மாள்சத்திரத்தில் பள்ளிக்கு செல்ல அரசு பேருந்தில் ஏறிய 8 பழங்குடியின மாணவிகளை நடத்துனர் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கீழே இறங்குமாறு கூறியதை மாணவிகள் மறுத்த நிலையில், நடத்துனரே தங்களை கீழே தள்ளிவிட்டதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.