தூத்துக்குடியில்
காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் மீது திமுகவினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாகக்
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். ராகுல் காந்தியை விமர்சித்த
திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனைக் கண்டித்துப் போராடியதால் இப்பழிவாங்கும் நடவடிக்கை என அவர் சாடியுள்ளார். வன்முறையைக் கையில் எடுப்பது திமுகவின் அகந்தையைக் காட்டுவதாகவும், குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.