சென்னை பனையூர் அலுவலகம் வருகை தந்துள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசவுள்ளனர். 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக, ஆட்சியமைக்க காங்கிரஸ், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளது. காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்கேட்டு ஆதரவு கொடுத்துள்ளது. இந்த சூழலில் யாருக்கு அமைச்சர் பதவி என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.