திமுக - காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், கூட்டணியைவிட்டு விலக இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், "தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. 'இந்தியா' கூட்டணியை பலவீனப்படுத்துவது, சிதைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை" என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னதாக, “பாஜக - அதிமுக கூட்டணி என்பது தமிழ்நாட்டு உரிமையை பறிக்கின்ற கூட்டணி” என காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்திருந்தார்.