தவெக அமைச்சரவையில்
காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் மற்றும் மேலூர் எம்.எல்.ஏ விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்ற நிலையில்,
விஜய் ஆட்சி அமைக்க தவெக உடன்
காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.