பீகார் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருவது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார். சென்னையில் இன்று (நவ.14) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுமே பின்னடைவு கிடையாது. இது, ஆட்சியை ரூசிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ள கட்சி கிடையாது. இது மக்களுக்கான இயக்கம். வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படமாட்டோம்” என்றார்.