தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ள தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்களின் தெளிவான தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் தொடர்ந்து தாமதம் செய்தால், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் ஜனநாயக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.