18 வயதை கடந்த இருவர் விருப்ப பாலியல் உறவில் இருந்தால், அது அவர்களின் தனிப்பட்ட எல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொண்டதாக பெண் அளித்த வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம், இக்கருத்தை தெரிவித்துள்ளது. மேலும், உறவின் தன்மை என்ன என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என்றும், வற்புறுத்தல், ஏமாற்றுதல் ஆகியவற்றில் மட்டுமே நீதிமன்றம் தலையிடும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.