தஞ்சாவூரில் இன்று (மார்ச். 3) நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். இதில், காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை குறித்து விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக ஆதரவாளர்கள் என்ற பெயரில் சிலர், சங்கீதா விவாகரத்து குறித்து இழிவாக பேசி சதி செய்வதாக அக்கட்சி சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், விஜய் கூடவே இருந்து சிலர் அவரை முதுகில் குத்துவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு விஜய் பதிலளிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.