விசிக வாக்குகள் முழுமையாக சேர விடாமல் சதி நடப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் குறித்து பேசியுள்ள அவர், தவெக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்ற செய்தியை பரப்பினால், களத்தில் விசிகவினர் தவெக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க மாட்டார்கள், விசிகவின் ஆதரவு முழுமையாக சேராது என நினைக்கிறார்கள். பாமக, தவெக கூட்டணி என திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள் என கூறியுள்ளார்.