தொகுதி பங்கீடு சர்ச்சை: முதலமைச்சர் ஸ்டாலின் இடத்திலிருந்து பார்க்கிறேன் - திருமாவளவன்

2பார்த்தது
தொகுதி பங்கீட்டிற்காக கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என மிரட்ட தனக்கு தெரியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காட்டுமன்னார் கோயிலில் இன்று (ஏப்.8) நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சூழலை உணர்ந்து அவர் இடத்திலிருந்து பார்க்கிறேன். 7 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டதை நான் ஏற்றுக்கொண்டேன். கூட்டணியின் ஒற்றுமையை கருத்தில் கொண்டே இணக்கமான முடிவை எடுத்தேன்" என விளக்கமளித்துள்ளார்.

நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி