தமிழகத்தின் புதிய டிஜிபியைத் தேர்வு செய்வது குறித்து டெல்லியில்
யுபிஎஸ்சி (UPSC) குழு இன்று தீவிர ஆலோசனை நடத்துகிறது. இதற்காகத் தமிழக அரசு ஏற்கனவே தகுதியான அதிகாரிகளின் பரிந்துரைப் பட்டியலை வழங்கியுள்ள நிலையில், இக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் உள்துறை செயலாளர் மணிவாசன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். விரைவில் புதிய டிஜிபி யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.