'BRO CODE' திரைப்பட டீசர், போஸ்டர்களை நீக்காததால் தயாரிப்பாளரும் நடிகருமான ரவிமோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'BRO CODE' பெயரில் மதுபானம் தயாரிக்கும் இண்டோ-ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கும் 'BRO CODE' பெயரை திரைப்படத்திற்கு பயன்படுத்த நடிகர் ரவிமோகனுக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.