வேலூர் மாவட்டம் விருபாட்சிபுரத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் தனுஷ்குமார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே மீண்டும் மின்தடை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அப்போது, “3 மாத குழந்தை எனக்கும் இருக்கு. எங்க வீட்டுலயும் கரண்ட் இல்ல. நான் ரோட்ல வந்து உட்காந்திருக்கேனா?” என்று அவர் கூறியதால் அங்கு வாக்குவாதம் முற்றியது.