மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் இன்று (பிப்.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.