தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களின் ஒப்பந்த காலம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார். அதன்படி, வரும் டிச.31-ம் தேதி வரை பார்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான உரிம கட்டணத்தை முறையான விதிகளின்படி முன்கூட்டியே வசூலிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.