கோவை தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.43,844 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து கோவையில் இன்று (நவ., 25) நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த முதலீடுகள் மூலம் கோவை பிராந்தியத்தில் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.