காஞ்சிபுரத்தில் இன்று (அக்.21) நடைபெற்ற அரசு விழா மேடையில் அதிகாரிகளுடன் தவெக நிர்வாகிகளும் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிகழ்ச்சியைப் போல அரசு விழா மேடையில் கட்சி நிர்வாகிகள் அமர்ந்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்விழாவில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார், மாவட்ட ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.