2025 - 26 நிதியாண்டில் மட்டும் 65 லட்சம் பேருக்கு மொத்தம் 74,100 கோடி ரூபாய் நகைக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்வு மற்றும் எளிமையான நடைமுறைகள் காரணமாக, தமிழக கூட்டுறவுத் துறையில் நகைக்கடன் புழக்கம் இந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கு உடனடி பண உதவி கிடைக்கிறது. தங்கம் விலை இதே நிலையில் நீடித்தால் வரும் காலங்களில் இந்த நகைக்கடன் தொகை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.