தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றவர்களுக்கு, சில முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. குறிப்பாக, நகைக்கடன் தள்ளுபடிக்கான தகுதிகள் குறித்த புதிய விதிமுறைகளை தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள், தவறான விவரங்கள் அளித்தவர்கள், வெள்ளை ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோருக்கு இந்த கடன் தள்ளுபடி கிடைக்காது என கூறப்படுகிறது.