ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கென ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள் மற்றும் தனி படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நோயாளிகளுக்காக தனி ஆம்புலன்ஸ் வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்யுமாறும் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.