கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் நடைபெற்ற ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பங்கேற்ற பெண்ணொருவர் மகளிர் உரிமைத் தொகைக்கு பல முறை விண்ணப்பித்து மனு அளித்தும் கிடைக்கவில்லை என புகார் கூறினார். தொடர்ந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். அவரை அதிகாரிகள், போலீசார் மற்றும் திமுகவினர் அமைதியாக இருக்குமாறு கூறிய நிலையில் பெண் கவுன்சிலர் ஒருவர் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்தார்.