தெலங்கானா மாநிலத்தில், வீட்டு முன் பைக்குகளை நிறுத்த வேண்டாம் என கூறிய தம்பதியை, விடுதி இளைஞர்கள் 30 பேர் தாக்கியுள்ளனர். குகட்பள்ளி - கேபிஹெச்பி சாலையில் உள்ள விடுதி இளைஞர்களிடம், “வீட்டின் முன் பைக்குகளை நிறுத்த வேண்டாம்” என்று பலமுறை தம்பதி கூறி வந்ததால் அவர்களுக்குள் மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் இருக்கை கவர் கிழிந்ததால், விடுதி இளைஞர்கள் அந்த தம்பதியை தாக்கினர்.