புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவராத்திரியை முன்னிட்டு அறந்தாங்கி அருகே நெடுங்குடி ஸ்ரீ கைலாசநாதர் கோயிலுக்கு சிலர் பொலிரோ பிக்கப் வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. தஞ்சாவூரைச் சேர்ந்த கணவன் - மனைவி ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.