சேலம் ஓமலூர் அருகே உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரில் கார் ஒன்று சிக்கி மூழ்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வெங்கடாஜலம் மற்றும் அவரது மனைவி ராதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தரைப்பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீரின் அளவை அறியாமல் காரைச் செலுத்தியதே இந்த சோக விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.