ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இரவு நேரத்தில் பெய்த கனமழையின்போது, மின்னல் தாக்கி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம்
மூப்பன்சாலையில் உள்ள இறைச்சி கடை ஒன்றின் மீது பயங்கர மின்னல் தாக்கியுள்ளது. இதில், அங்கு இருந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.