சிறப்பு தரிசனம் ரத்து: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

8890பார்த்தது
சிறப்பு தரிசனம் ரத்து: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
பணத்தின் அடிப்படையில் மக்களிடையே பாரபட்சம் காட்டும் விதமாக சிறப்பு தரிசனத்தை அமல்படுத்த முடியாது என்றும், எனவே சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்த வழக்கில், தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் வருகிற 29-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் உத்தரவிட்டனர். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோருக்கு இலவச சிறப்பு தரிசனம் அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி