தமிழகத்தில் கள் இறக்கவும் விற்கவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, உரிய கொள்கையை உருவாக்கக் கோரி மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நிலுவையில் உள்ள பிற வழக்குகளோடு சேர்த்து விசாரணைக்கு ஒத்திவைத்தனர்.