வருமானத்தை மறைத்ததாக விஜய்க்கு விதித்த அபராதம்.. தீர்ப்பை தள்ளிவைத்தது நீதிமன்றம்

24பார்த்தது
வருமானத்தை மறைத்ததாக விஜய்க்கு விதித்த அபராதம்.. தீர்ப்பை தள்ளிவைத்தது நீதிமன்றம்
கடந்த 2015-16-ம் நிதியாண்டில் தனது வருமானத்தை மறைத்ததாக நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது. இந்த உத்தரவு 2019 ஜூன் 30-க்குள் பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி