தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இல்லை என்றும், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தொடரும் என்றும் CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் திருவாரூரில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். முன்னதாக, தவெக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் இணையும் காலம் வரும் என CPI-ன் வீரபாண்டியன் பேசியதால், CPI மற்றும் CPM தவெக ஆட்சியில் பங்கேற்கலாம் என எழுந்த
அரசியல் யூகங்களுக்கு பெ.சண்முகம் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.