மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வாக்காளர்களுக்குப் பகிரங்கமாகப் பணம் கொடுப்பதாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தவெக தரப்பில் ஓட்டுக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை வழங்கப்படுவதாக வாக்காளர்களே தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். மேலும், எந்தவித மறைமுகமும் இன்றி, வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு பட்டப்பகலிலேயே தவெகவினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.