இண்டிகோ விமானத்தின் கண்ணாடியில் விரிசல் - அசம்பாவிதம் தவிர்ப்பு

10பார்த்தது
இண்டிகோ விமானத்தின் கண்ணாடியில் விரிசல் - அசம்பாவிதம் தவிர்ப்பு
மதுரையில் இருந்து இன்று (அக்., 11) சென்னைக்கு 76 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சாதுர்யமாக செயல்பட்ட விமானி பத்திரமாக தரையிறக்கியதால் பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, பின் விமானத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள், விமான குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.