கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், சிறுமியின் உடலை தாய்க்கே தெரியாமல் தகனம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் தெரிவிக்காமலேயே தன் மகள் உடலை தகனம் செய்துவிட்டதாக அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மருத்துவமனையில் இருந்து மகளின் உடலை பெற தான் கையெழுத்திடவில்லை என்றும் தாய் பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.