கிரிக்கெட் போட்டிக்கிடையே தேனீக்கள் கொட்டியதில் கிரிக்கெட் நடுவர் உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் நேற்று (பிப்., 18) நடந்த கிரிக்கெட் போட்டியின் போது, தேனீக்களின் கொட்டியதில் நடுவர் மாணிக் குப்தா (65) உயிரிழந்தார். சப்ரு மைதானத்தில் இந்த சம்பவம் நடந்தது. குப்தா கான்பூரில் உள்ள மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதே போல், 20 வீரர்களும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.